உலகம்
ஜி7 நாடுகள்

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு

Published On 2022-05-20 03:16 GMT   |   Update On 2022-05-20 03:16 GMT
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி:

உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். 

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தேவையான நிதி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு உதவி ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளன.

ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.4 லட்சம் கோடி) நிதி உதவியாக வழங்கவுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News