உலகம்
ரணில் விக்ரமசிங்கே

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

Published On 2022-05-13 02:17 GMT   |   Update On 2022-05-13 02:17 GMT
ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
கொழும்பு :

பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது.

இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News