உலகம்
நிலநடுக்கம்

தைவானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

Published On 2022-05-09 10:36 GMT   |   Update On 2022-05-09 10:36 GMT
தைவான் இரண்டு புவியத் தட்டுகளுக்கு இடையில் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
தைபே: 
 
தைவானில் இன்று 6.1 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது 27.5 கி.மீ ஆழத்தில் தைவானின் கிழக்கு கடற்கரை  மையப்பகுதியில் இருந்து ஹுவேலியன் மற்றும் தெற்கு ஜப்பானிய தீவான யோனாகுனி கடற்கரையின் பகுதியளவு வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எந்தவொரு பாதிப்பு குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி போன்ற ஆபத்து ஏற்படாது என்று   ஜப்பான் வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

தைவான் இரண்டு புவியத் தட்டுகளுக்கு இடையில் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News