உலகம்
மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளியை மூடிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தான்: மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளியை மூடிய தலிபான்கள்

Published On 2022-04-29 03:41 GMT   |   Update On 2022-04-29 03:41 GMT
பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.
காபூல் :

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் பல்க் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணியாமலும், ஹிஜாப் அணிந்தும் முகத்தை மூடாமலும் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் எந்தவித விளக்கமும் கேட்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News