உலகம்
ரஷியா-உக்ரைன் போர்

உக்ரைனுக்கு நட்பு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை அழித்த ரஷியா

Published On 2022-04-27 15:47 IST   |   Update On 2022-04-27 15:47:00 IST
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு பண உதவி மற்றும் ஆயுத உதவியை அளித்து வருகின்றன.
மாஸ்கோ:

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 63வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு பண உதவி மற்றும் ஆயுத உதவியை அளித்து வருகின்றன.

இந்நிலையில்  அந்த நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அலுமினிய ஆலை அருகே உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை கடல் தாண்டி தாக்குல் காலிபர் ஏவுகணைகள் மூலம் அழித்ததாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நவீன ஆயுதங்கள் அழிக்கப்பட்டது, அந்நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Similar News