உலகம்
இம்ரான் கான்

தனது சொந்த மக்களுக்காகவே இந்தியா சிந்திக்கும்: இம்ரான் கான் மீண்டும் பாராட்டு

Published On 2022-04-23 02:15 GMT   |   Update On 2022-04-23 02:15 GMT
லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.
இஸ்லமாபாத் :

லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.

இம்ரான் கான் பேசுகையில், “அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. பொருளாதார தடைகளை தாண்டி ரஷியாவில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்கிறது.

அந்த நாட்டின் முடிவுகள் மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் நம் நாட்டின் கொள்கை ஒரு சிலரின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது..

பாகிஸ்தானுக்கான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நான் பின்பற்றியதால் தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். நான் மக்களுக்காக கொள்கை முடிவெடுப்பது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை”என்றார்.
Tags:    

Similar News