உலகம்
தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு

தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு

Published On 2022-04-11 07:47 IST   |   Update On 2022-04-11 07:47:00 IST
தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது தென்கொரியா மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
சியோல் :

ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது உண்டு. இந்த நிலை இப்போது மாறி வருகிறது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 481 ஆக சரிவை சந்தித்தது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 33 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்றினால் நேற்று 329 பேர் இறந்தனர். அங்கு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 421 ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது தென்கொரியா மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

Similar News