உலகம்
பாகிஸ்தான் பாராளுமன்றம்

பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு - ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்

Published On 2022-04-10 00:05 GMT   |   Update On 2022-04-10 00:05 GMT
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், அங்குள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 

நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியதும் பாகிஸ்தான் பாராளுமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News