உலகம்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா- சீனாவில் பல நகரங்களில் ஊரடங்கு அமல்

Published On 2022-03-28 05:44 GMT   |   Update On 2022-03-28 05:44 GMT
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பெய்ஜிங்:

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாங்காய் உள்பட பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டு உள்ளன.

ஏற்கனவே அங்குள்ள டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டு உள்ளது குறிபிடத்தக்கது. பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News