உலகம்
மேடலின் ஆல்பிரைட் (கோப்பு படம்)

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்

Published On 2022-03-24 04:21 IST   |   Update On 2022-03-24 04:21:00 IST
செக்கோஸ்லோவாக்கியாவை பூர்வீகமாகக் கொண்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 84.

அவர் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டுள்ளார். நாங்கள் ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி, அத்தை மற்றும் நண்பரை இழந்துவிட்டோம் என்று டுவிட்டர் பதிவில் மேடலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் 1996 ஆண்டு  அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலாளராக மேடலின் ஆல்பிரைட்டை நியமனம் செய்தார்.

பில் கிளிண்டன் ஆட்சியில் 2001ம் ஆண்டுவரை அந்த பதவியை அவர் வகித்து வந்தார். பதவி ஓய்வுக்கு பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சிமுறை குறித்து மேடலின் கடுமையாக விமர்சித்து வந்தார்.

செக்கோஸ்லோவாக்கியாவை பூர்வீகமாகக் கொண்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. 2012-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மேடலின் ஆல்பிரைட்டுக்கு அமெரிக்காவின் உயரிய விருதான சுதந்திரப் பதக்கத்தை வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News