உலகம்
ஜோ பைடன்

பதிலடி..! அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக ரஷியா பொருளாதாரத்தடை விதிப்பு

Published On 2022-03-15 16:46 GMT   |   Update On 2022-03-15 16:48 GMT
அதிபர் புதின், ரஷிய வங்கிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தடை விதித்துள்ள நிலையில் ரஷிய பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததும் அமெரிக்கா பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க தொடங்கியது. ரஷியா தாக்குதலை நிறுத்தாததால் புதின் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு தடைவிதித்தது.

இந்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக ரஷியா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. மேலும், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோனி பிளிங்டன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் மீதும் தடைவிதித்துள்ளது. 

எனினும், வாஷிங்டனுடன் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணுவதாகவும், உயர் அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளவர்களுடன் உயர்மட்ட தொடர்புகள் நடைபெறலாம் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News