உலகம்
ரஷியா மீது சர்வதேச கோர்ட்டு நாளை இடைகால உத்தரவு விதிக்கிறது

ரஷியா மீது சர்வதேச கோர்ட்டு நாளை இடைகால உத்தரவு விதிக்கிறது

Published On 2022-03-15 13:59 IST   |   Update On 2022-03-15 17:54:00 IST
சர்வதேச நீதிமன்றம் ரஷிய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது. அப்போது ரஷியாவுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிய வரும்.
போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது. போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் கூறுகிறது. 



இதுதொடர்பாக சர்வதேச கோர்ட்டில் உக்ரைன் புகார் அளித்து உள்ளது. இதுதொடர்பான விசாரணை நடந்து வந்தது. நாளை (புதன்கிழமை) சர்வதேச நீதிமன்றம் ரஷிய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது. அப்போது ரஷியாவுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிய வரும்.

Similar News