உலகம்
சீனாவிடம் ராணுவ உதவியை ரஷியா கேட்டுள்ளது

சீனாவிடம் ராணுவ உதவியை ரஷியா கேட்டுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

Published On 2022-03-14 06:54 GMT   |   Update On 2022-03-14 06:54 GMT
உலகளாவிய பொருளாதார தடையால் ரஷியாவின் பொருளாதாரம் பாதித்துள்ளது. சீனா தனது தரப்பு ஆதரவை ரஷியாவுக்கு தெரிவித்து வருகிறது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சுலிவன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடையும் விதித்துள்ளது.

உக்ரைனுக்கு அனைத்து நாடுகளும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவிடம் ரஷியா ராணுவ உதவியை கேட்டு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சுலிவன் கூறியதாவது:-



உலகளாவிய பொருளாதார தடையால் ரஷியாவின் பொருளாதாரம் பாதித்துள்ளது. சீனா தனது தரப்பு ஆதரவை ரஷியாவுக்கு தெரிவித்து வருகிறது. சீனாவிடம் ரஷியா ராணுவ உதவியை கேட்டுள்ளது. ரஷியாவுக்கு உதவுவதை சீனா தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். நாங்கள் முன்னோக்கி செல்ல அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையேயான உயர்மட்ட அதிகாரிகள் குழு கூட்டம் இத்தாலி தலைநகர் ரோமில் இன்று நடக்கிறது. உக்ரைன் மீது ரஷியாவின் போர் ஆக்ரோ‌ஷம் அடைந்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் உள்ள நிலையில் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News