உலகம்
அமேசான் நிறுவனம்

உக்ரைன் விவகாரம் - ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது அமேசான்

Published On 2022-03-10 22:50 GMT   |   Update On 2022-03-10 22:50 GMT
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவையை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன.
வாஷிங்டன்:

உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.
     
ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News