உலகம்
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்

5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு

Published On 2022-02-22 13:59 GMT   |   Update On 2022-02-22 14:28 GMT
ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன்  அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது.

மேலும், ஐந்து ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இறையாண்மையுள்ள உக்ரைனில் ரஷ்யா படைகளை நிலைநிறுத்துவது அந்நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்கு சமம் என்பதில் சபைக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்
Tags:    

Similar News