உலகம்
கோப்பு படம்

உக்ரைன், ரஷியா செல்லும் விமானங்கள் ரத்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

Published On 2022-02-21 13:43 IST   |   Update On 2022-02-21 16:14:00 IST
உக்ரைன் - ரஷியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.


போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.

உக்ரைன் - ரஷியா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்கு வரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.

Similar News