உலகம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

Published On 2022-02-18 03:04 GMT   |   Update On 2022-02-18 03:04 GMT
முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சென்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். இம்ரான்கான் அழைப்பின் பேரிலேயே பில்கேட்ஸ் பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் :

உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார். பில்கேட்சுக்கு இம்ரான்கான் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.

பில் கேட்ஸ், வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது வழங்கி அந்த நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மத்திய மந்திரிகளும், பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இம்ரான்கான் அழைப்பின் பேரிலேயே பில்கேட்ஸ் பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News