உலகம்
வள்ளுவர் தெரு குறித்த பதாகையை வெளியிட்ட உறுப்பினர்கள்

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவர் பெயரில் சாலை

Published On 2022-02-04 17:41 IST   |   Update On 2022-02-04 17:41:00 IST
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட இருக்கிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட இருக்கிறது. விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த சாலை உள்ளது. ஆங்கிலத்தில் Valluvar Way என்றும் தமிழில்  ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த சாலை அழைக்கப்படும்.

இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Similar News