உலகம்
கொரோனா வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி- இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு

Published On 2021-12-16 12:54 IST   |   Update On 2021-12-16 12:54:00 IST
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று மிகவும் அதிகரித்தது. சில நாட்களாகவே தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது.

இந்தநிலையில் நேற்று அதிகபட்சமாக தினசரி பாதிப்பு பதிவானது. நேற்று ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் சூழல் உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News