செய்திகள்
கொரோனா வைரஸ்

நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Published On 2021-11-06 19:23 IST   |   Update On 2021-11-06 19:23:00 IST
ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது.
ஆக்லாண்டு:

நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். 

தலைநகர் ஆக்லாண்டில் மட்டும் 200 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்து இருப்பது தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதாக ஆக்லாண்டு சுகாதாரத்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் பரவலை மிகத் திறமையாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக பாரட்டப்பட்ட நியூசிலாந்து, டெல்டா வகை தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
Tags:    

Similar News