செய்திகள்
கிரேட்டா தன்பெர்க்

கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி - கிரேட்டா தன்பெர்க் குற்றச்சாட்டு

Published On 2021-11-05 19:04 GMT   |   Update On 2021-11-05 19:04 GMT
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாநாடு கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கிளாஸ்கோ:

கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும் இடத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஒரு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி அடைந்துள்ளது. விதிகளில் ஓட்டைகளை தீவிரமாக உருவாக்கி அங்குள்ள தலைவர்கள் தங்கள் நாட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாசுபடுத்துபவர்களைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும்.

உலகத் தலைவர்கள் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் தப்பிக்க முடியாது.

அவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்து பேசி பேசி நாம்தான் சோர்வாகிவிட்டோம். ஆகவே இனி அவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றத்துக்கான முன்னெடுப்பை நாமே எடுப்போம். ஒருமித்த கருத்தைப் புறக்கணிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களால் நம்மைப் புறக்கணிக்க முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News