செய்திகள்
கிளாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடி

ஜி20 மாநாடு முடிந்து கிளாஸ்கோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2021-10-31 23:26 GMT   |   Update On 2021-10-31 23:26 GMT
கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கிளாஸ்கோ:

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.

கிளாஸ்கோ நகரில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பருவநிலை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். 

இந்நிலையில், ரோமில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி கிளாஸ்கோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். 

Tags:    

Similar News