செய்திகள்
பிபிசி செய்தி

சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு: காரணம் இரண்டேதான்?

Published On 2021-02-11 22:50 IST   |   Update On 2021-02-11 22:50:00 IST
சீனாவில் பிபிசி உலக செய்திகள் ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதிக்க இருப்பதாக அங்குள்ள மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.

என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டி, அதற்கு தடை விதிக்க இருப்பதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

Similar News