செய்திகள்
கோப்புப்படம்

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

Published On 2020-10-12 19:34 GMT   |   Update On 2020-10-12 19:34 GMT
சீனா நேற்று தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங்:

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடு தொடர்ச்சியாக பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் சீனா நேற்று தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நில அளவீடுகள், நகர திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு மற்றும் பேரழிவு தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்றும் நடப்பாண்டின் பிற்பகுதியில் 6 ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News