செய்திகள்
வாகன ஓட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதார குழுவினர்

கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 2835 பேர் பலி

Published On 2020-02-29 03:22 GMT   |   Update On 2020-02-29 03:22 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 47 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது.
பீஜிங்:

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் குறையத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 47 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. 

79 ஆயிரத்து 251 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 427 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது முந்தைய நாளை விட சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் அதே வளையில், பிற நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 

Tags:    

Similar News