செய்திகள்
ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

Published On 2019-08-20 22:28 IST   |   Update On 2019-08-20 22:28:00 IST
ஜேம்ஸ் பாண்ட் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.

ஜேம்ஸ் பாண்டின் முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ. கடந்த 2015-ல் வெளியானது ஸ்பெக்டர் திரைப்படம். இதில் நடிகர் டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன.



இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் வரிசையின் 25-வது படத்திற்கு 'நோ டைம் டூ டை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News