சினிமா செய்திகள்

OTT- யில் வெளியாகும் தலைவர் தம்பி தலைமையில்...

Published On 2026-02-07 10:58 IST   |   Update On 2026-02-07 10:58:00 IST
  • இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
  • ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவானது. இப்படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. பொங்கலையொட்டி வெளியான, சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', கார்த்தியின் 'வா வாத்தியார்' படங்களை பின்னுக்குத் தள்ளி ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 12-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். 

Tags:    

Similar News