செய்திகள்

பிரேசில் சிறையில் கலவரம்- 15 கைதிகள் பலி

Published On 2019-05-27 11:17 GMT   |   Update On 2019-05-27 11:17 GMT
பிரேசில் சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 15 கைதிகள் பலியாகினார்கள்.
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாஸ் அருகே ஒரு சிறைச்சாலை உள்ளது. அங்கு பல தரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை பார்வையாளர் நேரத்தின்போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக வெடித்தது.

உடனே ஏராளமான போலீசார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் கலவரத்தில் 15 கைதிகள் பலியாகினர்.

இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

பிரேசில் சிறைகளில் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடியால்தான் இங்கு கைதிகள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

இந்த கலவரத்தில் பலியானோர்களின் உறவினர்கள் சிறைச்சாலை அருகே கூடி சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News