செய்திகள்

உகான்டாவில் மழை, வெள்ளத்துக்கு 18 பேர் பலி

Published On 2019-04-23 15:12 GMT   |   Update On 2019-04-23 15:12 GMT
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகான்டாவின் இரு மாநிலங்களில் கொட்டித்தீர்த்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்தனர். #Eighteenkilled #heavyrains #Ugandarains
கம்பாலா:

உகான்டா நாட்டின் கிழக்கில் உள்ள புயென்டே மற்றும் கமுலி மாநிலங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த பெருமழையினால் கியோலா ஏரியை ஒட்டி தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளப் பெருக்கினால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், மழை மற்றும் வெள்ளம்சார்ந்த விபத்துகளில் புயென்டே மாநிலத்தில் 13 பேரும் கமுலி மாநிலத்தில் 5 பேரும் உயிரிழந்ததாக உகாண்டா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Eighteenkilled #heavyrains #Ugandarains 
Tags:    

Similar News