செய்திகள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்

Published On 2019-04-21 21:51 GMT   |   Update On 2019-04-21 21:51 GMT
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு போப் ஆண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார். #SriLankablasts #Colomboblasts
வாட்டிகன்:

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு போப் ஆண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் ஆசி வழங்கினார். அதன் நிறைவில், இலங்கை குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அவர், பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடனான எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #SriLankablasts #Colomboblasts

Tags:    

Similar News