செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்

Published On 2019-03-20 18:40 GMT   |   Update On 2019-03-20 18:40 GMT
தென்ஆப்பிரிக்காவில் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர். #SouthAfrica #PresidentCyrilRamaphosa
கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்காவில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் போட்டியிடுகிறார்.

இதையொட்டி அவர் நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், ரெயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்து பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கவுட்டெங் மாகாணத்தின் மெபோபானே நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் ரெயிலுக்காக ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதையடுத்து, அவர் மெபோபானேவில் இருந்து தலைநகர் பிரிட்டோரியா செல்லும் ரெயிலில் ஏறினார். மெபோபானேவில் இருந்து பிரிட்டோரியா செல்ல 45 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த ரெயில் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் பிரிட்டோரியா சென்றடைந்தது.

இதனால் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் தவிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர், “இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரெயில்வே நிர்வாகம் நிலைமையை மேம்படுத்தவில்லையென்றால் தலைகள் உருளும்” என்றார்.  #SouthAfrica #PresidentCyrilRamaphosa

Tags:    

Similar News