செய்திகள்
பாகிஸ்தான் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீஸ்.

பாதியில் இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்

Published On 2019-03-02 05:57 GMT   |   Update On 2019-03-02 05:57 GMT
எல்லை பதட்டம் காரணமாக அமிர்தசரஸ் அருகே நிறுத்தப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பாகிஸ்தான் பயணிகளுக்கு இந்திய போலீசார் உணவு வழங்கி உபசரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #SamjhautaExpress #IndianPolice
கராச்சி:

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.

இதனால் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் லாகூர் வரை வந்தது. அந்த ரெயிலில் இந்தியாவுக்கு பயணம் செய்த 16 பாகிஸ்தான் பயணிகள் இருந்தனர். இருந்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரெயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.



இதனால் நடுவழியில் தவித்த பயணிகள் அட்டாரி ரெயில் நிலையத்துக்கு வெளியே ஆதரவற்ற நிலையில் தவித்தபடி நின்றனர். அட்டாரி இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் அருகே உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற இந்திய போலீசார் அவர்களுக்கு உணவு அளித்து உபசரித்தனர்.   #SamjhautaExpress #IndianPolice
Tags:    

Similar News