செய்திகள்

ஹங்கேரி நாட்டில் 4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை

Published On 2019-02-12 05:29 GMT   |   Update On 2019-02-12 05:29 GMT
ஹங்கேரியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். #Hungarianwomen #Children
புடாபெஸ்ட்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.

இதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்தார்.

மேலும், நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Hungarianwomen #Children

Tags:    

Similar News