செய்திகள்

1350 கிலோ மீட்டர் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்

Published On 2019-02-02 20:16 IST   |   Update On 2019-02-02 20:16:00 IST
1350 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. #Iranmissiletest #cruisemissile
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டது. 

இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஜனநாயக அரசை நிலைநிறுத்துவதற்காக ஈரான் அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், எதிரி நாடான இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது.

அவ்வகையில், 1350 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

‘ஹோவைஸே’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 1200 கிலோ மீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் நாட்டு ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி தெரிவித்தார். தாழ்வாகவும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை மிக குறைவான நேரத்தில் தாக்குதலுக்கு தயார் படுத்தி விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். #Iranmissiletest #cruisemissile

Similar News