செய்திகள்

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

Published On 2019-01-21 13:36 IST   |   Update On 2019-01-21 13:36:00 IST
அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். #Racistattack
நியூயார்க்:

அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட் தயாரிக்க ரோலிங் பேப்பர் கேட்டார். அதற்கான அடையாள அட்டை இல்லாததால் அவர் தர மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஹர்விந்தர் சிங்கிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். அவரது தாடியை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினார். தொடர்ந்து அடித்து உதைத்து கீழே தள்ளினார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் அவர் விடவில்லை. தொடர்ந்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்துனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் மீது இனவெறி தாக்குதல் பிரிவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  #Racistattack
Tags:    

Similar News