செய்திகள்
‘சீட்பெல்ட்’ போடாமல் கார் ஓட்டும் இளவரசர் பிலிப்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராணி எலிசபெத் கணவர்

Published On 2019-01-21 06:21 GMT   |   Update On 2019-01-21 06:21 GMT
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #QueenElizabeth #Philip
லண்டன்:

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நார்போக் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ‘லேண்ட் ரோவர்’ காரை தனியாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினார்.

அதில் எதிரே மற்றொரு காரில் வந்த 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். அப்போது அவர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்தார்.

இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்கும் முன்பு நேற்று முன்தினமும் இவர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டினார்.

சாண்டரிங்காம் பகுதியில் புதிய லேண்ட் ரோவர் காரை ஓட்டிச்சென்ற அவரை போலீசார் பார்த்தனர். இளவரசர் என தெரிந்ததும் அவரை வழிமடக்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் ‘சீட் பெல்ட்’ அணியும்படி அறிவுறுத்தினர்.



இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்மூலம் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். #QueenElizabeth #Philip
Tags:    

Similar News