செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு

Published On 2019-01-18 05:02 GMT   |   Update On 2019-01-18 05:02 GMT
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானதில், சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #GoldMineCollapsed #MiningDisasters
காபூல்:

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. #GoldMineCollapsed #MiningDisasters
Tags:    

Similar News