செய்திகள்

பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர் சரண்

Published On 2019-01-08 20:01 GMT   |   Update On 2019-01-08 20:01 GMT
பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரர் கிறிஸ்டோப் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து போலீசில் சரண் அடைந்தார். #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer
பாரீஸ்:

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை ரத்து செய்யக்கோரி வார இறுதிநாட்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படும் இந்த போராடம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் வலுப்பெற்றது.

மேலும் கடந்த வார போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் போலீசாரை சரமாரியாக குத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, கிறிஸ்டோப் பெட்டிங்கர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  #France #YellowVest #Protest #ChristopheDettinger #Boxer 
Tags:    

Similar News