செய்திகள்

சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல்- 11 பயங்கரவாதிகள் பலி

Published On 2018-12-21 05:40 GMT   |   Update On 2018-12-21 05:40 GMT
சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்த்த 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Somalia #USAirstrikes
மொகடிஷூ:

சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷூவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெலத் அமின் சவுத் பகுதியில் அல் ஷபாப் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை விமான தாக்குதல்களை நடத்தியது. விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மொகடிஷூ மீது தாக்குதல் நடத்துவதற்காக பெலத் அமின் சவுத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய படைகளுடன் அமெரிக்க படைகளும் இணைந்து கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. #Somalia #USAirstrikes
Tags:    

Similar News