செய்திகள்

ஏமன் உள்நாட்டு போரால் பட்டினி-ஊட்டச்சத்து குறைவால் 85 ஆயிரம் குழந்தைகள் மரணம்

Published On 2018-11-22 12:40 GMT   |   Update On 2018-11-22 12:40 GMT
ஏமன் உள்நாட்டு போரால் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

சனா:

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. ஏமன் நாட்டு அரசுக்கு எதிராக ஹுதி என்ற புரட்சி அமைப்பினர் போராடி வருகிறார்கள்.

இவர்களுக்கு பல அரசியல் தலைவர்களும் பக்கபலமாக உள்ளனர். தலைநகரம் சனா உள்ளிட்ட பல பகுதிகளை ஹுதி அமைப்பினர் கைப்பற்றி வைத்துள்ளனர்.

பெரும்பாலான பகுதி அரசிடம் உள்ளது. இது தவிர மேலும் 2 பகுதிகளை 2 அமைப்புகள் கைப்பற்றி வைத்துள்ளன. அவற்றை கைப்பற்றுவதற்கு அரசு படைகள் போராடி வருகிறது.

நாட்டில் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொருவர் கையில் இருப்பதால் அங்கு அரசு அமைப்பே செயல்படவில்லை. மக்களுக்கு தேவையான எந்த பொருட்களும் சப்ளை இல்லை.

இதன் காரணமாக மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பசி - பஞ்சத்தில் சிக்கி இருப்பதாக ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது.

இது குழந்தைகளை மிகவும் பாதித்திருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

5 வயதுக்கு உட்டப்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்களை காப்பாற்ற உணவோ மற்றும் மருந்து பொருட்களோ கிடைக்க வில்லை. இதன் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஏமன் நாட்டு போரில் இதுவரை 50 அயிரம் பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

Tags:    

Similar News