செய்திகள்

தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - பிரிட்டனில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா

Published On 2018-11-15 11:24 GMT   |   Update On 2018-11-15 11:24 GMT
பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மேலும் ஒரு மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். #Britishministerresigns #EstherMcVeresigns #Brexitagreement
லண்டன்:

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் இன்று சமர்ப்பித்த பிரெக்சிட் வரைவு உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராப் இன்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவரை தொடரந்து பிரிட்டன் தொழிலாளர் நலன் மற்றும் ஓய்வூதியத்துறை மந்திரியான எஸ்தர் மெக்வே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் இரு மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாணயமான பவுண்டுகளின் மதிப்பில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. #Britishministerrsigns  #EstherMcVeresigns #Brexitagreement
Tags:    

Similar News