செய்திகள்

இலங்கை பாராளுமன்றம் கலைப்பு - அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு

Published On 2018-11-09 16:43 GMT   |   Update On 2018-11-09 16:43 GMT
அடுத்த வாரம் பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், அதிபர் சிறிசேனா இன்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். #sirisena #ranilwickremesinghe #srilankaparliament
கொழும்பு:

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.

இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதற்கிடையே, பாராளுமன்றம் 14–ம் தேதி கூடும் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று இரவு பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #sirisena #ranilwickremesinghe #srilankaparliament
Tags:    

Similar News