செய்திகள்

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- பீதியில் மக்கள் ஓட்டம்

Published On 2018-11-05 05:46 GMT   |   Update On 2018-11-05 05:46 GMT
ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #japanearthquake

டோக்கியோ:

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இங்கு 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிறிய அளவில் அவை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஜப்பான் பூகம்ப தாக்குதல் பகுதியில் உள்ளது. அதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.  #japanearthquake

Tags:    

Similar News