செய்திகள்

நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2018-11-03 04:27 IST   |   Update On 2018-11-03 04:27:00 IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #NepalPM #KPSharmaOli
காத்மாண்டு:

நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் மருத்துவ கவனிப்புக்கு பிறகு உடல்நிலை தேறியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலும், இருதயத்தில் நோய்த் தொற்று காரணமாகவும் சமீபகாலமாக அவர் கடும் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
 
இதற்கிடையே, பிரதமர் கே.பி.ஒலியின் உடல்நிலை மோசமடைந்தது. சளி இருமல் அதிகரித்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதால் உடனே மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள மன்மோகன் கார்டியோ வாஸ்குலார் மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. ஒலியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின்படி ஒலி நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், சர்மா ஒலியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அவர் இரண்டொரு நாட்களுக்கு பிறகு அவர் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளனர். #NepalPM #KPSharmaOli
Tags:    

Similar News