செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 5 பேர் பலி

Published On 2018-10-27 15:32 IST   |   Update On 2018-10-27 15:32:00 IST
ஆப்கானிஸ்தானில் போலீசார் சென்ற பேருந்து மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் உள்பட 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். #Afghanistan #SuicideAttack #Taliban
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் வர்தாக் மாகாணத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று காலை அந்த குடியிருப்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஏறினர்.

அந்த பேருந்து குடிடிருப்பு வாசல் அருகே வந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரம்பிய கார் மூலம் பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 2 அதிகாரிகள், 3 ஊழியர்கள் என மொத்தம் 5 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.



தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் சில்ர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்தனர்.

போலீசார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #Afghanistan #SuicideAttack #Taliban
Tags:    

Similar News