செய்திகள்

அமெரிக்காவின் பிரபல செய்தி சேனலுக்கு சந்தேகத்துக்குரிய பார்சல் - வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்

Published On 2018-10-24 20:49 IST   |   Update On 2018-10-24 20:52:00 IST
நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
நியூயார்க்:

அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் அந்நாட்டின் மிகப்பிரபலமான ‘சி.என்.என்.’ செய்தி தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.

டைம் வார்னர் சென்டர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்துக்கு இன்று சந்தேகத்துக்குரிய மர்ம பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தங்களது செய்தி ஒளிபரப்பின்போது ஒரு அறிவிப்பை ‘சி.என்.என்.’ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவரசமாக வெளியேறினர். 

இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் வெடிப்பொருள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி நிலையத்துக்கு உளவுத்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர். #CNNbureauinNY  #NYCNNbureauevacuated  #CNNsuspiciouspackage
Tags:    

Similar News