செய்திகள்

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது - சவுதி அரேபியா

Published On 2018-10-22 07:16 GMT   |   Update On 2018-10-22 07:16 GMT
துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது என சவுதி அரேபியா கூறியுள்ளது. #JamalKhashoggi

ரியாத்:

துருக்கி நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.

அவருடைய கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவரை பற்றிய விவரங்களை கேட்டு வந்தன.

அவரை சவுதிஅரேபியா இளவரசர் தான் திட்டமிட்டு கொன்றுவிட்டதாக புகார் கூறப்பட்டது. இதை சவுதி அரேபியா மறுத்து வந்தது. அவர் இறந்ததை உறுதிப்படுத்தவும் இல்லை.

இப்போது ஜமால்கசோஜி இறந்துவிட்டதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. யாரோ தூண்டி விட்டதால் கூலிப்படையினர் அவரை கொன்றதாக சவுதி அரேபியா கூறியிருக்கிறது. ஆனால் இந்த கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை கூறியது.


ஜமால்கசோஜி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தாலும் அவரது உடல் எங்கு இருக்கிறது என்ற விவரத்தை சவுதி அரேபியா சொல்லவில்லை. அவர் கொலை செய்யப்பட்டதைத் தான் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அவரது உடல் எங்கு இருக்கிறது என்று தெரியாது என்று சவுதிஅரேபியா கூறியுள்ளது.

இதுசம்பந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறும்போது, சவுதிஅரேபியா இந்த வி‌ஷயத்தில் பொய் சொல்கிறது. உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சவுதிஅரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளன. #JamalKhashoggi

Tags:    

Similar News