செய்திகள்

உகாண்டா நாட்டில் திடீர் நிலச்சரிவு - 34 பேர் பலி

Published On 2018-10-13 02:38 IST   |   Update On 2018-10-13 02:38:00 IST
உகாண்டாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Ugandamudslides
கம்பாலா :

உகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. #Ugandamudslides
Tags:    

Similar News