செய்திகள்

நான் தான் உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் - மெலானியா டிரம்ப்

Published On 2018-10-13 01:18 IST   |   Update On 2018-10-13 01:18:00 IST
உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால் இதற்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி உள்ளேன் என மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார். #MelaniaTrump
வாஷிங்டன் :

இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், வலுவான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளேன். என்னைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் உண்மையில் பார்க்க வேண்டும்.  

அதனால்தான் எனது சிறந்த முன்முயற்சி சமூக ஊடக மற்றும் ஆன்லைன் நடத்தையை மையமாகக் கொண்டது. இது போன்ற கிண்டல்களை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளையும் தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக உணர்ச்சிப் பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க  வேண்டும், அதனால் அவர்கள் வளர்ந்து வரும் போது இது போன்ற சிக்கல்களை சமாளிப்பார்கள் என அவர் தெரிவித்தார். #MelaniaTrump
Tags:    

Similar News