செய்திகள்

நேபாளத்தில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு

Published On 2018-10-09 16:11 IST   |   Update On 2018-10-09 16:11:00 IST
அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளின் எண்ணிக்கை நேபாளம் நாட்டில் குறுகிய காலத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. #Nepaltiger #tigerpopulation #tigerpopulationdoubles
காத்மாண்டு:

உலகெங்கிலும் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள புலிகளை பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலியை தேசிய விலங்காக அறிவித்துள்ள இந்தியாவிலும் புலிகளை பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனினும், ஓரளவுக்கு மட்டுமே புலிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

சில நாடுகளில் புலிகளை பாதுகாக்க உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில், நேபாளம் நாட்டில் புலிகள் பாதுகாப்புக்கான உயர்மட்ட குழுவில் அந்நாட்டின் பிரதமர் இடம்பெற்றுள்ளார்.


இதன்விளைவாக, நேபாளம் நாட்டு வனப்பகுதிகள் கடந்த 2009-ம் ஆண்டு 121 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 235 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு காப்பகங்களின் உயரதிகாரி கோபால் பிரகாஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். #Nepaltiger #tigerpopulation #tigerpopulationdoubles
Tags:    

Similar News